News
மீனம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

பொறுப்புணர்வுடன் பணிபுரியும் மீனராசி அன்பர்களே!
சுக்கிரன் சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். செயல்களில் முன்யோசனை அவசியம். உறவினர்களுக்கு ஓரளவு உதவுவீர்கள். குடும்பத்திற்கான தேவை எளிதில் நிறைவேறும். வீடு வாகனத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். புத்திரர் பெற்றோர் சொல்லை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். இஷ்டதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்க சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்கால நலன் குறித்து கணவரிடம் ஆலோசனை நடத்துவர். மாணவர்கள் புதியவர்களின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.
சந்திராஷ்டமம்: 12.3.20 காலை 9:57 மணி முதல்
14.3.20 மதியம் 12:40 மணி வரை

பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
கும்பம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

செயல்களில் புதுமையை விரும்பும் கும்பராசி அன்பர்களே!
குரு சனீஸ்வரர் செவ்வாய் கேது சுக்கிரன் விபரீத ராஜயோகபலன் வழங்குவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர் உங்கள் ஆலோசனையை கேட்டுப் பெறுவார். தாய்வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாசத்துடன் பழகுவர். புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். குலதெய்வ அருள்பலம் முக்கியமான நன்மையை பெற்றுத்தரும். எதிர்ப்பாளரிடம் விலகுவதால் சிரமம் குறையும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் பேச்சு செயலில் நம்பிக்கையின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு பெறுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.
சந்திராஷ்டமம்: 10.3.20 காலை 7:36 மணி முதல்
12.3.20 காலை 9:56 மணி வரை

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
மகரம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

மாற்றுத்திட்டத்தினால் நன்மை பெறும் மகரராசி அன்பர்களே
ராகு சுக்கிரன் சந்திரன் தாராள நற்பலன் வழங்குவர். உங்கள் பேச்சில் புதுமையான கருத்து வெளிப்படும். எதிர்ப்பாக பேசுபவரிடம் விலகவும்.குடும்ப செலவுகளுக்கு அதிக பணம் தேவைப்படும். அறிமுகம் இல்லாதவர்க்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் தமது விருப்பம் நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அளவான உழைப்பு சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பணப்பரிவர்த்தனையில் உரிய பாதுகாப்பு வேண்டும்.மனைவி வழி சார்ந்த உறவினர் உங்கள் நல்ல குணத்தை பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சியை மேற்கொள்வர்.
சந்திராஷ்டமம்: 8.3.20 காலை 6:00 மணி முதல்
10.3.20 காலை 7:35 மணி வரை

பரிகாரம்: அம்பிகை வழிபாடு பல நலமும் தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
தனுசு 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

சமயோசிதமாக துன்பம் தவிர்த்திடும் தனுசுராசி அன்பர்களே!
சூரியன் சுக்கிரன் சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உத்வேகமும் செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரரின் தேவையை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். எதிரியிடம் விலகுவதால் வீண் பிரச்சனை வராமல் தவிர்க்கலாம். உறவினர்களின் அதிக அன்பு பாசம் நம்பிக்கையை தரும். மனைவியின் இணக்கமான செயல்பாடு குடும்ப வாழ்வை சிறப்பாக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் பணவரவு சீராகும். பணியாளர்கள் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு நன்மை தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
விருச்சிகம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

எண்ணங்களை செயலாக்கும் விருச்சிகராசி அன்பர்களே!

குரு சந்திரன் புதனால் நன்மை உண்டாகும். உங்கள் பேச்சில் உண்மையும் நேர்மையும் நிறைந்திருக்கும். விலகிய உறவினர்கள் விரும்பி சொந்தம் பாராட்டுவர். வாகனத்தில் அபிவிருத்தி மேற்கொள்வீர்கள். புத்திரர் அறிவார்ந்த செயலால் பெற்றோர்க்கு பெருமை தேடித்தருவர். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கலாம். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான இலக்கை அடைவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
துலாம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

நேர்த்தியுடன் பணிபுரியும் துலாம்ராசி அன்பர்களே!

செவ்வாய் கேது சனீஸ்வரர் சந்திரன் அதிர்ஷ்டகரபலன் தருவர். நண்பரிடம் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வீடு வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். புத்திரர் பெற்றோரிடம் அன்பு பாசத்துடன் பழகுவர். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும். மனைவி உங்களின் நல்ல குணத்தை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் போட்டி குறையும். சேமிக்கும் அளவில் பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். பெண்கள் தாராள பணவரவில் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
கன்னி 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

வாக்குறுதி தருவதில் நிதானமுள்ள கன்னிராசி அன்பர்களே!

சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சுபபலன் தருவர். திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் செயல்படுத்துவீர்கள். நற்பெயரும் புகழும் தேடி வரும். வாகனத்தின் பயன்பாடு அளவாக இருக்கும். புத்திரர் படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்க்கு கடனாக கொடுத்த பணம் வந்து சேரும். மனைவி ஒற்றுமையுடன் குடும்பநலனில் அக்கறை கொள்வார். தொழிலில் உற்பத்தி விற்பனை புதியவர்களின் ஆதரவில் வளரும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஆர்வமுடன் ஏற்பர். பெண்கள் தாய்வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
சிம்மம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

நண்பர்களுக்கு உதவும் சிம்மராசி அன்பர்களே!

குரு ராகு சுக்கிரன் சந்திரன் ஆதாயபலன் தருவர். சமூக நிகழ்வு மனதில் நல்ல மாற்றம் தரும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் படிப்பில் முன்னேறுவர். ஆன்மிகத்திலும் ஆர்வம் கொள்வர். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி உண்டு. தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் எளிதில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகை திருப்திகரமாக கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் கவனமுடன் படித்தால் தரத்தேர்ச்சி சீராகும்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நன்மை தரும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
கடகம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

நல்ல பேரை பாதுகாத்திடும் கடகராசி அன்பர்களே!

கேது சனீஸ்வரர் புதன் செவ்வாய் சந்திரனால் ராஜயோகபலன் கிடைக்கும். புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும்;. புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை அன்புடன் ஏற்றுக் கொள்வர். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். நோய் தொந்தரவு குறையும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் சிறப்பான செயல்களை பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். அரசு சார்ந்த உதவி பெறலாம். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பு பாசத்தில் பெருமிதம் கொள்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
மிதுனம் 8.3.2020 முதல் 14.3.2020 வரை வார ராசிபலன்

புதிய கருத்துக்களை வரவேற்கும் மிதுனராசி அன்பர்களே!

சுக்கிரன் குரு சந்திரன் அளப்பரிய நன்மை வழங்குவர். நண்பர்களிடம் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். குடும்ப செலவுக்கான பணவரவு தாராளமாக கிடைக்கும். இளமைக்கால நண்பரை சந்திக்க வாய்ப்பு வரும். புத்திரர் படிப்பு செயல்திறனில் மேம்படுவர். வழக்கு விவகாரங்களில் சமயோசித அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். மனைவி ஜாதகத்தின் யோகபலன் புதிய நன்மைகளை பெற்றுத்தரும். தொழில் வியாபாரம் செழித்து வளர்ந்து லாப விகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் தனக்கான கடமையை உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
வழங்குபவர்
சங்கர்ஜி
போன் : 90034 55032

March 6,2020
எங்களை தொடர்பு கொள்ள

Saadhanai

No.18, Chandragandhi Nagar,

Bye Pass Road,

Madurai-625016

Phone: (0452 - 4366425)